Pt Sir திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
Pt Sir
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் Pt Sir எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்தார்.
இசையமைப்பாளராக இது ஹிப் ஹாப் ஆதிக்கு 25வது திரைப்படமாகும். இப்படத்தை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரா, அனிகா, தியாகராஜன், இளவரசு, பிரபு, பாக்கியராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் Pt Sir திரைப்படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.
வசூல் விவரம்
முதல் மூன்று நாட்களில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்திருந்த Pt Sir திரைப்படம், தற்போது 6 நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூலை வாரிக்குவிக்க போகிறது என்று.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
