PT Sir - திரைவிமர்சனம்
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள PT Sir படத்தின் திரைவிமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இது இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி 25வது திரைப்படமாகும். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப் ஹாப் ஆதி.
எந்த ஒரு பிரச்சனை என்றால் அதில் பாய்ந்து நீதியை தட்டி கேட்பவர் அல்ல ஆதி, எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என நினைப்பவர்.
இந்த சமயத்தில் ஆதி தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிறுவனத்தில் இருந்து பிரச்சனை ஒன்று ஏற்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொள். அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு திரைப்படத்தில் பேசியது போலவே இப்படத்திலும் சமுதாய அக்கறையோடு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் தனது இயக்கத்தின் மூலம் பேசியுள்ளார்.
சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படத்தில் காட்டிய விதம் அருமை. ஆனால், அதில் சுவாரஸ்யம் குறைவு.
சிறு குழந்தை முதல் 40 வயதாகும் பெண் வரை சமூகத்தில் சந்திக்கும் கசப்பான அனுபவங்களை வலியுடன் திரை வழியாக நமக்கு கடத்திய விதம் சூப்பர். அதற்கு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு பாராட்டுக்கள்.
திரைக்கதையில் சில தொய்வு இருந்தாலும், இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி அசத்தல் இருந்தது. கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிகாவின் நடிப்பு படத்திற்கு பலம். ஆனாலும் கூட ஹிப் ஹாப் ஆதி இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கதாநாயகி காஷ்மீராவிற்கு இன்னும் ஸ்கோப் கொடுத்திருக்கலாம். வில்லனாக வரும் தியாகராஜன் மிரட்டுகிறார். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இளவரசு மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பு தான். எந்த வகையில் அவர் குறை வைக்கவில்லை.
பாடல்கள் மனதை தொட வில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கிறது. குறிப்பாக அச்சமில்லை அச்சமில்லை என்ற இசை வரும் இடம் வெறித்தனம். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
- பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை காட்டிய விதம்
- ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிகா நடிப்பு
- இளவரசு மற்றும் தேவதர்ஷினி நடிப்பு
- பின்னணி இசை
- இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
மைனஸ் பாயிண்ட்
- சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
- சுவாரஸ்யம் குறைவு
மொத்தத்தில் சமுதாய அக்கறையோடு எடுக்கப்பட்ட PT Sir திரைப்படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
