வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ் ! முதல்முறையாக வெளியான புகைப்படம்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் சினிமாவரை பிரபலமானவர்கள் அதிகம் உண்டு, அந்த வகையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ்.
குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 என இரண்டு சீசன்களையும் புகழ் ஒருவருக்காகவே பார்த்தவர்களும் உண்டு.
இதனிடையே திரைப்படங்களில் வாய்ப்பு வர அதில் கவனம் செலுத்தி வரும் புகழ் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டர்.
அதன்படி அடுத்து ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது புகழ் அவரின் வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட அவரின் ரசிகர்கள் அவருக்கு எப்போது திருமணம் என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
