செம குத்தாட்டம் போட்ட புகழ், பாலா, ரித்விகா.. குக் வித் கோமாளி செட்டில் இருந்து வெளிவந்த வீடியோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனாக குக் வித் கோமாளி நடைபெற்று வருகிறது.
இதில், கிராஸ் கருணாஸ், ரோஷினி, அம்மு அபிராமி, சுட்டி அரவிந்த், ஸ்ருத்திகா என பல பிரபலங்கள் போட்டிபோட்டு சமைத்து வருகிறார்கள்.
மேலும், பாலா, ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை மற்றும் பல புதிய கோமாளிகளும் நம்மை மகிழ வைத்து வருகிறார்கள்.
சூப்பராக நடனம் ஆடிய புகழ், பாலா, ரித்விகா
இந்நிலையில், இந்த வாரம் சீசன் 2 Vs சீசன் 3 என்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் குக் வித் கோமாளி சீசன் 2வில் இருந்து ஷகீலா, கனி, பவித்ரா, ரித்விகா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது, புகழ், ரித்விகா, பாலா மற்றும் சில குக்ஸ், கோமாளிகள் சூப்பராக நடனம் ஆடிய வீடியோவை ரித்விகா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..