சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் மாறிய விஜய் டிவி புகழ்.. அட, நீங்களே பாருங்க
விஜய் டிவி புகழ்
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர பிரபலங்களில் ஒருவர் புகழ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் இடம்பெறும் சிரிச்சா போச்சு சுற்றில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமானார்.
இதன்பின் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியிட்டார். இதன்பின், புதிதாக துவங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய புகழ் முதல் இரண்டு சீசன்களில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
[6P1QI ]
ஆம், அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சந்தானத்துடன் சபாபதி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். மேலும், Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார்.
ரஜினிகாந்த் போல் மாறிய புகழ்
இந்நிலையில், இந்த குக் வித் கோமாளி சீசன் 3யின் பைனல் என்பதை அனைவரும் அறிவோம். படப்பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால், குக் வித் கோமாளி சீசன் 3யில் புகழ் சில நாட்கள் மட்டுமே கலந்துகொண்டார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வேடத்தில் கோமாளிகள் தோன்றுவார்கள். அதுவும் இன்று ஃபைனல் என்பதால் கோமாளிகள் மக்களிடம் மிகவும் பரிச்சையமான நடிகர், நடிகைகள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை போலவே வேடமிட்டுள்ளதை நாம் ப்ரோமோவில் பார்த்தோம்.
இதில், கோமாளி புகழ் முத்து படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலவே வேடமிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகழ் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

