பிக்பாஸ் 5 அல்லது குக் வித் கோமாளி 3, எந்த நிகழ்ச்சியில் புகழ் வரப்போகிறார் தெரியுமா?- அவரே கூறிய தகவல்
குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மக்களால் கொண்டாடப்பட்டவர் புகழ். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்ட வந்த அவர் சின்ன சின்ன விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி பணிபுரிந்து வந்தார்.
பின் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் புகழ் புகழ் என்று கொண்டாடும் அளவிற்கு பிரபலம் ஆனார்.
2வது சீசனில் படு பிரபலம் அடைந்த அவருக்கு இப்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஆரம்பித்ததால் அவர் குக் வித் கோமாளி 3ல் வருவது சந்தேகம் என கூறப்பட்டது.
தற்போது என்னவென்றால் ஒரு பேட்டியில் புகழிடம் பிக்பாஸ் 5ல் வருகிறீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு அவர், பிக்பாஸ் 5ல் கண்டிப்பாக நான் இல்லை ஆனால் குக் வித் கோமாளி 3ல் என்னை பார்க்கலாம் என கூறியிருக்கிறாராம்.
அவர் சொன்னதாக வந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.