பல வருட கனவு.. சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்த விஜய் டிவி புகழ் நெகிழ்ச்சி
விஜய் டிவியில் காமெடியனாக பிரபலம் ஆகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது வேகமாக வளரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் புகழ்.
புகழ் இதற்கு முன் பல்வேறு பேட்டிகளில் பேசும்போது தனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்திக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கனவு என கூறி இருக்கிறார்.
சந்திப்பு
இந்நிலையில் நேரில் சந்திக்க ரஜினியே அவரை அழைத்து இருக்கிறார். காலை 9 மணிக்கு வர சொன்னாராம் ரஜினி. ஆனால் காலை 7 மணிக்கு முன்பே சென்று அவர் வீடு அருகில் காரில் காத்திருந்து இருக்கிறார் புகழ்.
ரஜினியை சந்தித்த போட்டோவை பதிவிட்டு புகழ் கூறி இருப்பதாவது.
"ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்" என புகழ் கூறி இருக்கிறார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
