விஜய், ரஜினி படத்தில் குக் வித் கோமாளி புகழ்.. இது வேற மாறி காம்போ
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆம், இதுவரை சந்தானத்தின் சபாபதி, அஜித்தின் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய்யின் யானை, சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், விஜய் சேதுபதியின் 46வது படம் உட்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் புகழ், தனது அடுத்தது படங்களை பற்றி வரிசையாக கூறி வந்தார்.
அந்த வரிசையில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
அதனை வைத்து பார்க்கும் பொழுது, விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் 169வது படம் அல்லது தனுஷின் திருச்சிற்றம்பலம் என மூன்று படங்களில் ஒரு படத்தில் புகழ் நடித்துள்ளார் என தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் யாருடைய படத்தில் புகழ் நடித்துள்ளார் என்று..