சர்ப்ரைஸ்னு ஒன்னு பண்ண பாரு.. புகழ் பிறந்தநாளில் மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்
புகழ்
விஜய் டிவியில் இருந்து சினிமாவில் நுழைந்திருக்கும் நடிகர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி தான் புகழ். குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலம் அடைந்த புகழ் தற்போது பல முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
மேலும் சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். புகழ் அவரது காதலி பென்சி உடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பிறந்தநாள் சர்ப்ரைஸ்
இந்நிலையில் சமீபத்தில் புகழ் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு மனைவி சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
ஒரு நாய் குட்டியை கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார் அவர். "ரொம்ப நன்றிடி பொண்டாட்டி. ஆனா சர்ப்ரைஸ் னு ஒன்னு பண்ண பாரு தங்கம்.. வேற லெவல் டி" என புகழ் இன்ஸ்டாவில் அதை பதிவிட்டு இருக்கிறார்
