அஜித்துடன் குக் வித் கோமாளி புகழ்.. வலிமை டிரைலரில் இருந்து வெளிவந்த காட்சி
அஜித்தின் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளிவந்தது.
தமிழ் திரையுலகமே கொண்டாடி வரும் வலிமை படத்தின் டிரைலர், Youtube-ல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இதன்பின் ஒரு வீடியோவை வெளியிட்டு புகழ் அதனை உறுதி செய்தார்.
இந்நிலையில், இன்று மாலை வெளிவந்த வலிமை படத்தின் டிரைலரில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் புகழ்.
அந்த காட்சியின் புகைப்படத்தை தற்போது புகழின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri