உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் புஷ்பா 2.. இதுவரை எத்தனை கோடி தெரியுமா
புஷ்பா 2
புஷ்பா 2 படம் தான் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக இடம்பிடித்துள்ளது. இதன்பின் கல்கி, ஸ்ட்ரீ 2 ஆகிய படங்கள் உள்ளன.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதே சமயத்தில் முதல் நாள் முதல் காட்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒரு சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இதனால் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இனி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்றும், அல்லு அர்ஜுனை கண்டித்தும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் 6 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புஷ்பா 2 படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 1550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.