தியேட்டரில் கதறி அழுத புனீத் ரசிகர்கள், கடைசி படம் பார்த்து எமோஷ்னல்! வீடியோ வைரல்
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படம் ஜேம்ஸ் திரைக்கு வந்திருக்கிறது. அதை பார்த்து ரசிகர்கள் தியேட்டரில் கண்ணீர் விடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
புனீத் ராஜ்குமார்
பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் 21ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவர்க்கு அப்போது வயது 46 வயது தான். ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது புனீத்தின் மரணம்.
இன்று புனீத்தின் பிறந்தநாள் என்பதால் அவரை நினைவுகூர்ந்து பல பிரபலங்கள் பதிவிட்டு உள்ளனர். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ட்விட்டரில் புனீத் பற்றி பதிவிட்டு உள்ளார்.

ஜேம்ஸ்
புனீத் நடித்திருக்கும் கடைசி படமான ஜேம்ஸ் இன்று திரைக்கு வந்திருக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் எல்லா தியேட்டர்களிலும் இந்த படம் தான் திரையிடப்பட்டு இருக்கிறது.
ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து நின்று கண்ணீர் விடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புனீத் ரசிகர்கள் பல மக்கள் நல விஷயங்களையும் செய்து இருக்கின்றனர்.
Fans getting emotional seeing after #James movie?
— Babu7@అన్నఫ్యాన్ (@Babu9440) March 17, 2022
Every fan is crying coming out of theatre seeing movie?#PuneethRajkumar #HappyBirthdayPuneethRajkumar pic.twitter.com/JHlo6XrdB8
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu