இத்தனை பெரிய உதவிகளை செய்துள்ள உயர்ந்த உள்ளம் கொண்டவர் புனித் ராஜ்குமார்..!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் புனித் ராஜ்குமார், இந்திய திரையுலகில் அதிக ரசிகர்களை வைத்துள்ளவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் இன்று காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து நடிகர் புனித் ராஜ்குமார் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
மேலும் அவரின் மறைவை தொடர்ந்து கர்நாடக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அவரின் உடல் நாளை அரசு மரியாதையையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் செய்துள்ள மிக பெரிய உதவிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் 45 இலவச பள்ளிகள், 26 அனாதை இல்லம், 16 முதியோர் இல்லங்கள், 1800 மாணவர்களின் கல்வி உதவி, 2 கண்களை தானம் செய்துள்ள உயர்ந்த மனிதன் புனித் ராஜ்குமார்.