மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் அழகிய குடும்பம்.. அனைவரையும் கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

family death puneeth rajkumar
By Kathick Oct 30, 2021 09:50 AM GMT
Report

கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனீத் ராஜ்குமார் குழந்தை பருவத்தில் இருந்தே பல படங்களில் நடித்தவர்.

எனினும் படத்தில் ஹீரோவாக முதலில் தோன்றியது, கடந்த 2002-ல் நடிகை ரக்ஷிதா ஜோடியாக நடித்து வெளியான அப்பு என்னும் திரைப்படம் மூலம் தான்.

அதிலிருந்தே ரசிகர்கள் இவரை அப்பு என செல்லமாக அழைக்க தொடங்கினர். கன்னட மண்ணில் புனீத்திற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், நேற்று திடீரென எதிர்பாராத விதமாக நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.

வழக்கம் போல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதன் விளைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில், தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

திரை உலகை சேர்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியாக இந்த செய்தி இருந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களுருவில் உள்ள கண்டிவாரா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், நடிகர் புனீத்தின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் தற்போது, புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள், அவரது அழகிய குடும்ப படங்களை இணையத்தில் வேகமாக வைரலாக்கி வருகிறார்கள். இதனை பார்க்க பலரும், உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் அழகிய குடும்பம்.. அனைவரையும் கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள் | Puneeth Rajkumarfamily Photo

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் அழகிய குடும்பம்.. அனைவரையும் கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள் | Puneeth Rajkumarfamily Photo

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் அழகிய குடும்பம்.. அனைவரையும் கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள் | Puneeth Rajkumarfamily Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US