இந்திய சினிமாவில் இதுவே முதல் முறை.. நான்கு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்
புஷ்பா 2
கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. நான்கு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.
கமர்ஷியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியுள்ளது.
நான்கு நாட்கள் வசூல் விவரம்
முதல் நாளில் இருந்தே வசூல் சாதனை படைத்து வரும் புஷ்பா 2 திரைப்படம், நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்திய சினிமாவில் நான்கு நாட்களில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் புஷ்பா 2 தான். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 1000 கோடியை கடந்து இமாலய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.