உலகளவில் புஷ்பா 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புஷ்பா 2
2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக புஷ்பா 2 பார்க்கப்படுகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தனர்.
ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார்.
மேலும் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டு சாதனை படைத்துள்ள புஷ்பா 2, 16 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், உலகளவில் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1500 கோடி வசூல் செய்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு! IBC Tamilnadu

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
