6 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புஷ்பா 2
பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, புஷ்பா 2 படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 990 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் குறைந்து நாட்களில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையப்போகும் படமாக சாதனை படைத்துள்ளது புஷ்பா 2 என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri