8 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புஷ்பா
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வசூலை வாரிக்குவித்தது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தாவிற்கு பதிலாக இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாடி இளைஞர்களை கவர்ந்து இருந்தார்.
வசூல்
இந்த நிலையில் 8 நாட்களை உலகளவில் கடந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 1110 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 1500 கோடியை எட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
You May Like This Video