புஷ்பா 2 படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம்.. ரஜினி கூட இந்த சாதனையை செய்தது இல்லை
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வெளிவரவுள்ளது.
புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சிலர் இந்த டீசர் சுமார் தான் என்றும் கமெண்ட் செய்தனர். முதல் பாகத்தின் மீது எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட 100 மடங்கு எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தின் மீது உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியொரு காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்.. கசிந்த புகைப்படம்
முதல் பாகத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்த சமந்தா, இரண்டாம் பாகத்தில் இல்லை என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மற்றொரு சென்சேஷனல் நாயகி ஒருவர் நடனமாடவுள்ளார் என சொல்லப்படுகிறது.
ஓடிடி
மேலும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், ஜெகதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் புஷ்பா 2 படத்தில் நடிக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இதுவரை எந்த நடிகரின் திரைப்படத்திற்கும் கொடுக்காத தொகையை கொடுத்து வாங்கியுள்ளதாம்.
கிட்டத்தட்ட ரூ. 275 கோடி வரை கொடுத்து இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் வசூல் மன்னர்களின் ஒருவரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கே இந்த அளவிற்கு எந்த நிறுவனமும் பணம் கொடுத்து ஓடிடி உரிமையை வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
