பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்சும் புஷ்பா 2? இப்படி ஒரு பிரமாண்டமா!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். 
இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்றது. 
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் 250 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ளதாம். மேலும் இப்படத்தின் ஒரு சண்டை காட்சியை எடுக்க 35 நாட்கள் எடுக்கிறார்களாம்.
புஷ்பா 2 படத்தை 1000 கோடிக்கு வியாபாரம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் 45 கோடிக்கு T- Series நிறுவனம் வாங்கியுள்ளதாம். பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூபாய் 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவின் Ex காதலருடன் டேட்டிங் செய்தது உண்மை!.. நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    