புஷ்பா 2 படத்தின் OTT உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியுள்ள நிறுவனம்- எத்தனை கோடி தெரியுமா?
புஷ்பா 2
ஒவ்வொரு நடிகருக்கு தனது சினிமா பயணத்தில் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்த படங்கள் இருக்கும்.
அப்படி தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜுன் நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும் பல மொழிகளில் ரசிகர்கள் கூட்டத்தை பெற ஒரு முக்கிய படமாக அமைந்தது தான் புஷ்பா.
சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் பாகம் செம ஹிட்டடிக்க இப்போது ரூ. 400 கோடி பட்ஜெட்டில் 2ம் பாகம் தயராகி வருகிறது.
டிசம்பர் 6ம் தேதி படு மாஸாக தயாராகி வரும் புஷ்பா 2 படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

OTT உரிமம்
ரூ. 350 கோடி வரை வசூலித்து முதல் பாகம் சாதனை படைக்க இரண்டாம் பாகம் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி சுமார் ரூ. 1000 கோடி வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் OTT உரிமம் விலைபோன தகவல் வந்துள்ளது.
புஷ்பா 2ம் பாகத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ. 270 கோடிக்கு வாங்கியுள்ளதாம். ஒரு படம் OTTயில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் முதல் பாகத்தை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியிருந்தது.

இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri