ரிலீசுக்கு முன்பே வசூலில் மாஸ் காட்டும் புஷ்பா 2.. இதுவரை இத்தனை கோடிகளா
புஷ்பா 2
கங்குவாவை தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படம் புஷ்பா 2. பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், அனுஷ்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
ப்ரீ புக்கிங் வசூல்
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் வசூல், நாளுக்கு நாள் மாஸ் காட்டி வருகிறது. ரிலீசுக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 25 கோடி வரை புஷ்பா 2 படம் வசூல் செய்துள்ளது.

ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri