புஷ்பா 2 தமிழ்நாட்டில் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா
புஷ்பா 2
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது புஷ்பா 2. அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர்.
ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டாலும் கூட, வசூலில் உலகளவில் ரூ. 1435 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழ வசூல் விவரம்
இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 1500 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புஷ்பா 2 படம் இதுவரை, 14 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் இப்பட்ம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை எட்டுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.