3 நாட்களில் புஷ்பா 2 செய்துள்ள இமாலய வசூல்.. மாபெரும் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புஷ்பா 2
புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து வசூல் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ளனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்பது, தற்போது வழக்கமாகிவிட்டது.
அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு
இந்த நிலையில் மூன்று நாட்களில் புஷ்பா 2 திரைப்படம், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 621 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். அடுத்த வாரம் இப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துவிடும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.