புஷ்பா 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புஷ்பா 2
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா 2.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவந்தது. அல்லு அர்ஜூனுடன் இணைந்து பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் சிறையில் இருந்து வெளிவந்தது, என பல ஷாக்கிங் விஷயங்கள் நடந்தது.
வசூல்
இந்த நிலையிலும், புஷ்பா 2 படத்தின் வசூல் மாபெரும் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது. ஆனால், இந்த சர்ச்சை பெரிதாக வெடித்தபின், வசூல் குறைய துவங்கியது.
உலகளவில் இதுவரை புஷ்பா 2 திரைப்படம் ரூ. 1720 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ் நாட்டில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது.