ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
புஷ்பா
அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று புஷ்பா. கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுஷ்யா, ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

புஷ்பா 1 தி ரைஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் புஷ்பா 2 வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரவிருக்கும் புஷ்பா 2 படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. இதுவரை வெளிநாட்டில் மட்டுமே ரூ. 17 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெளிநாடுகளிலும் இப்படம் வசூல் சாதனை படைக்கும் என தெரிகிறது.

இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan