புஷ்பா 2 இதுவரை வெளிநாட்டில் செய்துள்ள வசூல்.. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியா
புஷ்பா 1
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக புஷ்பா 1 உள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர்.

ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், அனுஷ்யா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். இவருடைய நடனம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என சொல்லலாம்.
புஷ்பா 2
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் புஷ்பா 2 படத்தில் சமந்தாவிற்கு பதிலாக ஸ்ரீலீலா ஒரே ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு பாடல்கள் அமைக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீ புக்கிங் வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கி, நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில், வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 22 கோடிக்கும் மேல் புஷ்பா 2 படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri