வசூலை வாரி குவிக்கும் சென்சேஷனல் புஷ்பா 2.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகளா
புஷ்பா 2
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுனின் நடிப்பில் மாஸாக உருவாகியுள்ள புஷ்பா 2 படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா 1.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடமாடிய நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில் வருகிற 5ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 38 கோடிக்கும் மேல், சென்சேஷனல் வசூல் செய்துள்ளது.