புஷ்பா 2 படத்தின் சாட்டிலைட் உரிமை.. இத்தனை கோடியா! ரசிகர்கள் ஷாக்
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வெளிவரவுள்ளது.
புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சிலர் இந்த டீசர் சுமார் தான் என்றும் கமெண்ட் செய்தனர். முதல் பாகத்தின் மீது எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட 100 மடங்கு எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தின் மீது உள்ளது.
சமீபத்தில் வெளிவந்த இப்படம் இரண்டு பாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், புஷ்பா படத்தின் பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சாட்டிலைட் உரிமை
ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி புஷ்பா 2 திரைப்படம் OTT-யில் மட்டுமே ரூ. 250 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். மேலும் கூடுதல் தகவலாக சாட்டிலைட் உரிமை ரூ. 130 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
படத்தின் பட்ஜெட் ரூ. 440 கோடி என கூறுகின்றனர். OTT மற்றும் சாட்டிலைட் விற்பனையில் மட்டுமே ரூ. 380 கோடி வரை வசூல் செய்துவிட்டது புஷ்பா என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
