திரையரங்கில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு புஷ்பா படக்குழு செய்த உதவி.. இத்தனை கோடியா?
புஷ்பா 2
தெலுங்கு சினிமாவில் இதுவரை யாருமே வாங்காத சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்திற்காக வாங்கினார் நடிகர் அல்லு அர்ஜுன்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த டிசம்பர் 5ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது.
பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ஆனால் ரிலீஸ் முதல்நாள் அல்லு அர்ஜுன் படம் பார்த்த திரையரங்கில் ஒரு பெண் உயிரிழந்த விவகாரம் தான் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
படக்குழு நிதியுதவி
இந்த நிலையில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ஏற்கெனவே அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்திருந்தார்.
ஏற்கெனவே ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் அவர் தரப்பில் ரூ. 50 லட்சம் அளித்துள்ளார்.