புஷ்பா 3ல் ஒரு பாடலுக்கு ஆடப்போகும் நடிகை.. யார் தெரியுமா? எதிர்பார்க்காத ஒருவர்
புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடி பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார். படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அடுத்து புஷ்பா 2ல் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். அதுவும் ஹிட் ஆகிவிட்டது. மேலும் படமும் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
3ம் பாகத்தில் இவரா..
அடுத்து புஷ்பா 3ம் பாகத்தில் யாரை ஆடவைப்பார்கள் என ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் டிஎஸ்பி-யிடம் கேட்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு பதில் அளித்த அவர், 'இறுதியில் அது இயக்குனரின் முடிவு தான். பாலிவுட்டில் இருந்து ஜான்வி கபூர் சிறப்பாக நடனம் ஆடுகிறார், ஸ்ரீதேவி மேடம் swag அவரிடம் அப்படியே இருக்கிறது. இருப்பினும் பாடலுக்கு யார் சரியாக இருப்பார்கள் என அப்போது பார்க்க வேண்டும்' என கூறி இருக்கிறார்.