புஷ்பா படம் செய்திருக்கும் பிரம்மாண்ட சாதனை! இந்தியாவில் எந்த படமும் செய்யாதது
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்து இருந்த புஷ்பா படம் கடந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டியது. தெலுங்கு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வசூல் ஈட்டியது. ஹிந்தியில் அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தை 350 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்க இருக்கின்றனர் என்றும் தகவல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது புஷ்பா படம் இதுவரை இந்திய படங்கள் செய்யாத சாதனையை செய்து இருக்கிறது. புஷ்பா படத்தின் பாடல்கள் தற்போது 5 பில்லியன் (500 கோடி) பார்வைகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்தது இருக்கின்றது.
இதை படக்குழு போஸ்டராக வெளியிட ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.