புஷ்பா 2 மாதிரியான படத்தில் விஜய், அஜித்.. இந்த கூட்டணியை எதிர்பார்க்கவே இல்லையே
புஷ்பா
கடந்த ஆண்டு இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழுவினரால் சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். உலகளவில் மாஸ் வசூலை அள்ளிய இப்படத்தின் மூன்றாம் பாகம் 2027ம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது.
இயக்குநர் சுகுமார் ஓப்பம் டாக்
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கலந்துகொண்டார். அப்போது, 'புஷ்பா 2 போல் தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்தால் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள்' என இயக்குநர் சுகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குநர் தளபதி விஜய், அஜித், கார்த்தி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டார். அவர் சொல்லும்போதே, அடடா இப்படியொரு கூட்டணியா என அனைவரும் வியந்துவிட்டனர்.