மாஸ் வசூல் வேட்டையில் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா- டாப் 10ல் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா.
சந்தன கடத்தல் குறித்து முக்கியமாக பேசும் இப்படம் ரூ. 200ல் இருந்து 250 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இரண்டு பாடல்கள் செம ஹிட். அய்யா சாமி மற்றும் ஓ சொல்றியா மாமா இந்த இரண்டு பாடல்களுமே பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
தெலுங்கில் உருவாகி தமிழ், ஹிந்தி என டப் செய்யப்பட்டு வெளியாகி அந்த மொழி ரசிகர்களாலும் படம் வரவேற்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கி வருட இறுதியில் படம் ரிலீஸே ஆகிவிடும் என்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் படத்தின் வசூல் சாதனை குறித்து ஒரு சூப்பர் தகவல்.
இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
தென்னிந்தியாவில் அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் புஷ்பா 7வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.