புஷ்பாவில் முகம்சுளிக்க வைத்த காட்சி.. திடீரென நீக்கிய படக்குழுவினர்
கடந்த வாரம் ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. மூன்றே நாளில் 173 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது அந்த படம். படத்தின் ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகள் இந்த படத்தை சுற்றி வந்தது அதன் மீது எதிர்பார்ப்பை கூட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.
சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா' பாடல் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது என சர்ச்சை எழுந்தது, செம்மர கடத்தல் பற்றிய கதை என்பதால் தமிழர்களுக்கு எதிரான படமா என கேள்வி எழுந்தது வரை புஷ்பா பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருக்கிறார். இந்நிலையில் படத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த ஒரு காட்சி திடீரென நீக்கப்பட்டு இருக்கிறது. ராஷ்மிகாவின் நெஞ்சை தொட்டு அல்லு அர்ஜூன் அது பற்றி பேசுவார்.
அந்த காட்சி தியேட்டரில் குடும்ப ரசிகரங்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கிறது என கூறப்பட்டது.
அதனால் படக்குழுவினர் அந்த ரொமான்ஸ் காட்சியை நீக்கி இருக்கின்றனர்.