மாஸ்டர் பட சாதனையை அடித்து நொறுக்கிய புஷ்பா ! இந்தியளவில் NO.1 இடம் பிடித்த அல்லு அர்ஜுன்..
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது.
திரையரங்கில் நேரடியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்தியளவில் முதல் நாளிலே அதிக வசூல் சாதனை செய்தது. அப்படத்தை தொடர்ந்து வெளியான எந்தஒரு திரைப்படமும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க தவறியது.
இதனிடையே தற்போது மாஸ்டர் படத்தின் முக்கிய சாதனையை புஷ்பா திரைப்படம் முறியடித்துள்ளது.
ஆம், நேற்று இந்தியளவில் 5 மொழிகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ.71 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புஷ்பா திரைப்படம் பல மாதங்களாக முறியடிக்க முடியாமல் இருந்த மாஸ்டர் சாதனையை முறியடித்துள்ளது.
2021 INDIA'S BIGGEST DAY 1 GROSSER ?#PushpaTheRise strikes big at the Box Office ?
— Mythri Movie Makers (@MythriOfficial) December 18, 2021
MASSive 71CR Gross Worldwide?#ThaggedheLe ?#PushpaBoxOfficeSensation @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @adityamusic @TSeries @PushpaMovie pic.twitter.com/FwRvqNVl7m