புஷ்பா படத்தில் நடனமாடியதால் சமந்தாவிற்கு வந்த சிக்கல்! தொடரப்பட்ட வழக்கு..
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தமிழில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது, அப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் புஷ்பா, பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.
மேலும் சமீபத்தில் வெளியான இப்பாடல் அனைத்து இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டது என்று தான் கூறவேண்டும். ஆம் அந்தளவிற்கு அப்பாடலில் கிளாமர் காட்டியுள்ளார் சமந்தா.
இந்நிலையில் தற்போது ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று அப்பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அந்த மனுவில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என கூறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri