டிஆர்பி-யில் தெறிக்கவிடும் புஷ்பா! பாலிவுட் ஹீரோக்களை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்
ஹிந்தி படங்களை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் புஷ்பா சாதித்து இருக்கிறது.
புஷ்பா
புஷ்பா படம் தான் இந்த வருடத்தின் பான் இந்தியா முழுவதும் பெரிய ஹிட் ஆன படம். தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், கன்னடம் என வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
மொத்தமாக வசூல் 350 கோடிக்கும் அதிகம், ஹிந்தியில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது புஷ்பா.

டிஆர்பி சாதனை
இந்நிலையில் தற்போது புஷ்பா டிவி டிஆர்பி ரேட்டிங்கிலும் ஹிந்தி படங்களை ஓவர்டேக் செய்து இருக்கிறது.
புஷ்பா படம் 4.34 TVR ரேட்டிங் பெற்று இருக்கிறது. ஆனால் சூர்யவன்ஷி படம் 2.7 மற்றும் கிரிக்கெட் படமான 83 வெறும் 1.79 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
#PushpaOnGoldmines Smashing Record TRP Ratings
— Goldmines Telefilms (@GTelefilms) March 31, 2022
Urban: 4.35 TVR
U+R: 4.23 TVR
Thanks For Your Love.. Many More To Come! #JhukegaNahi #PushpaTheRise @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @Dhananjayaka @Mee_Sunil @anusuyakhasba @ThisIsDSP @GTelefilms pic.twitter.com/s5ViiCD1Nn