மூன்றே நாளில் இத்தனை கோடியா.. 'புஷ்பா' தயாரிப்பாளரே வெளியிட்ட பிரம்மாண்ட வசூல் விவரம்
அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடித்திருக்கும் புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
படம் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியான நிலையில் தற்போது ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் படம் அல்லு அர்ஜுன் கெரியரில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். மூன்றே நாட்களில் படம் உலகம் முழுவதும்173 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
இதை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று திங்கட்கிழமை படம் 200 கோடி ருபாய் மைல்கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pushpa Raj rage at the Box Office continues ??
— Mythri Movie Makers (@MythriOfficial) December 20, 2021
MASSive 173 CR 3 days Gross Worldwide for #PushpaTheRise ??#PushpaBoxOfficeSensation@alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @adityamusic @TSeries @PushpaMovie pic.twitter.com/8UyzaZCEXv