புஷ்பாவை இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா அமேசான்? இன்று ரிலீஸ்
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா படம் தியேட்டர்களி ல் வெளிவந்து மிக பிரம்மாண்ட வசூலை ஈட்டியது. அனைத்து மொழி வசூலையும் சேர்த்து புஷ்பா ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளது.
ஆந்திராவில் நடக்கும் செம்மர கடத்தல் பற்றிய புஷ்பா கதையில் அல்லு அர்ஜுன் நடிப்பு மற்றும் சமந்தாவின் ஐட்டம் டான்ஸ் ஆகியவை அதிகம் பேசப்பட்டன. படம் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று ஜனவரி 7, 2022 அன்று மாலை 8 மணிக்கு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் புஷ்பா படத்தை அமேசான் எத்தனை கோடிக்கு வாங்கியது என்கிற தகவல் வெளிவந்து இருக்கிறது. மொத்தம் 30 கோடி ரூபாய்க்கு ஓடிடி உரிமை விற்பனை ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிவி உரிமை மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.