அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது - வெளியான சூப்பர் தகவல்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை பண்டிகை தினத்தன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
ஆம், இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.