புதுபுது அர்த்தங்கள் 200வது எபிசோட் ஸ்பெஷல், கொண்டாட்டத்திற்கு ரெடியா
புது புது அர்த்தங்கள் தொடரின் 200 எபிசோடுகளைக் கொண்டாடும் விதமாக பெண்களின் மீதுள்ள இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சிந்திக்க தூண்டும் ஆற்றல்மிக்க கதைகள், வெறும் பொழுதுபோக்கினைத் தாண்டி மேலும் ஒரு படி தாண்டி அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.
இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘புது புது அர்த்தங்கள்’ முன்னணித் தொடரானது 200-வது எபிசோடை கடந்ததைக் கொண்டாடும் விதமாக, ஜீ தமிழ் தொலைக்காட்சி அதன் கதையை மேலும் சுவாரஸ்யமாக்கத் தயாராகியுள்ளது.
மற்ற நெடுந்தொடர்களிலிருந்து தனித்து வித்தியாசமாக இருக்கும் இந்த தொடரானது, ஒரு மாமியார்-மருமகள் இடையிலான அன்பான உறவினை மையமாக கொண்டுள்ளது. தனது குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சுற்றியே தனது வாழ்வினை அமைத்துக்கொண்டு, வீட்டிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நற்குணமுள்ள பெண்ணாக, லக்ஷ்மி கதாபாத்திரத்தில், இன்முகம் கொண்ட நடிகை தேவயானி நடித்துள்ளார்.
இதுவரை இத்தொடரில், வழக்கத்தை மாற்றியமைக்கும் பல்வேறு கதைத் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. அன்பையும், மகிழ்ச்சியினையும் தேடும் பயணத்தில் லக்ஷ்மிக்கு உறுதுணையாக நிற்கும் பார்வதி கதாபாத்திரத்தில், முன்னேற்றத்தினை நோக்கிச் செல்லும் மருமகளாக பார்வதி நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒளிபரப்பான இத்தொடரின் அத்தியாயங்களில் – அபிஷேகாக நடித்த ஹரி கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கதாபாத்திரங்களின் திருமணம் எதிர்பாராத சூழ்நிலையில், நிகழ்ந்தது. திருமணம் முடிந்த பின்பு தொடர்ச்சியாக பல்வேறு மகிழ்ச்சியற்றத் தருணங்களை கடக்க நேர்கிறது. அதனைத் தொடர்ந்து லக்ஷ்மி தனது சொந்தக் காலில் நிற்கவும், வேறு எவருடைய ஆதரவும் இல்லாமல் தனக்கான மரியாதையைத் தானே ஈட்டுவதற்கும் முடிவெடுக்கிறாள்.
தொடரின் 200-வது அத்தியாயத்திலிருந்து, தனக்கு பிடித்த சமையல் துறையில் சாதிக்க வேண்டுமெனக் கடினமாக உழைக்கும் ஒரு மன உறுதிமிக்க லக்ஷ்மியை ரசிகர்கள் காணலாம். வெறும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோக்கிய தேடலாக இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை; பெண்கள் உழைத்து தங்களது கனவுகளை சாதித்து, சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பறைசாற்றவுள்ளது.
நவம்பர் 11, வியாழக்கிழமை, ஜீ தமிழ் தொலைக்காட்சியைக் காண மறந்துவிடாதீர்கள். தடையற்ற பொழுதுபோக்கிற்கு ஜீ தமிழின் சமூக ஊடகத் தளங்களை பின்தொடரவும்!