பீஸ்ட் ரிலீஸ் தேதியை லீக் செய்த மல்டிப்ளெக்ஸ் நிறுவனம்! எதிர்பார்த்த தேதி இல்லை
விஜய் நடித்து இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகிவிட்ட நிலையில் அதற்கு அடுத்து எந்த அப்டேட்டையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.
இசை வெளியீட்டு விழா கேன்சல்
ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை என இன்று வெளியான தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் வழக்கமாக ஆடியோ லாஞ்சில் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்க முடியாதோ என விஜய் ரசிகர்கள் அதிகம் வருத்தம் அடைந்து இருக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
சொந்தமாக விமானம் வாங்கி வைத்திருக்கும் இந்திய நடிகர்கள்! யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட்
ரிலீஸ் தேதியை லீக் செய்த PVR
படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படாமல் தான் இருக்கிறது. இந்நிலையில் பிரபல மல்டிபிளெக்ஸ் நிறுவனமான PVR தற்போது பீஸ்ட் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் லீக் செய்து இருக்கின்றனர்.
ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவித்து உள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் அந்த பதிவை அவர்கள் நீக்கிவிட்டனர்.