பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி வாங்கிய மொத்தம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக மக்கள் நினைக்கும் போட்டியாளர் வெளியேறுவது இல்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் உள்ளது. ஆனால் இந்த சீசன் அப்படி இல்லை, மக்கள் நினைக்கும் போட்டியாளர் தான் வெளியேறி வருகிறார்.
குயின்ஸி சம்பளம்
தற்போது இந்த வாரம் வெளியேறுவது குயின்ஸி தான் என மக்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டு வந்த நிலையில் அவர் தான் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.
ஆனால் சிலருக்கு குயின்ஸி வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக தான் உள்ளது.
வீட்டில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி ஒரு வாரத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.