தனுஷ் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் 1 கிராம் வெயிட் ஏறாது.. ரகசியத்தை சொன்ன பிரபல இயக்குனர்.
தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து தனுஷ் நடிப்பில் வர இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீசுக்காக தான் அவரது ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
தமிழ் மட்டுமின்றி தனுஷ் ஹிந்தி, ஹாலிவுட் என நடித்து இருப்பதால் அவர் இந்தியா முழுவதும் பாப்புலர் தான்.
ஒரு கிராம் கூட எடை கூடாது..
தனுஷ் நடித்த ஹிந்தி படமான ஷமிதாப் படத்தை இயக்கி இருந்த R பால்கி தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் தனுஷ் பற்றி வியந்து பேசி இருக்கிறார்.
தனுஷ் தற்போது 40 வயதானுலும் பார்க்க ஸ்கூல் பையன் போல தான் இருந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் அவருக்கு ஒரு கிராம் கூட எடை கூடாது என பால்கி கூறி இருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் நடிகர் கவினுக்கு திருமணம்- தேதியுடன் வந்த சூப்பர் தகவல்