மாதவன் தன் சொகுசு கப்பல் பற்றி கொடுத்த விளக்கம்.. விலை இத்தனை கோடியா?
நடிகர் மாதவன் தமிழ் மற்றும் ஹிந்தியில் பாப்புலர் நடிகராக இருந்து வருகிறார். அவர் ஹிந்தியில் படங்கள் இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
சமீபத்தில் பேட்டி அளித்த அவர் பணம் பற்றி பேசி இருக்கிறார். "சினிமாவில் தெளிவான முடிவுகள் எடுக்க financial security ரொம்ப அவசியம். உங்களுக்கு பணம் தான் பிரச்சனை என்றால், நீங்கள் பாதி தோற்றுவிடீர்கள்."
அதிகம் அழுத்தத்தில், அந்த பணத்தை சம்பாதிக்க தேவையான முடிவுகளை தான் நீங்கள் எடுப்பீர்கள். 'பணம் எல்லாம் வேண்டாம், வாங்க படம் எடுக்கலாம்' என தைரியமாக சொல்லும் ஸ்டார்கள் மிக மிக குறைவு.
கப்பல்
துபாயில் வசித்து வரும் நடிகர் மாதவன் அங்கு சொந்தமாக கப்பல் ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். அது பற்றி பல்வேறு வதந்திகள் வருவதாகவும் மாதவன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
"செய்திகளில் வருவது போல அது 75 அடி சொகுசு கப்பல் எல்லாம் இல்லை. அது வெறும் சின்ன boat. ஆனால் அது தான் நான் செய்த மிகப்பெரிய செலவு. ஆனால் அதற்காக எல்லாம் வெட்கபடமாட்டேன்" என மாதவன் கூறி இருக்கிறார்.
மாதவன் வாங்கி இருக்கும் Yacht விலை சுமார் 16 கோடி ரூபாய் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. துபாய் மட்டுமின்றி மும்பையிலும் மாதவன் பல சொத்துக்கள் வைத்து இருக்கிறார். ரியல் எஸ்டேட்டில் தான் ஆரம்பகாலத்தில் செய்த முதலீடுகள் உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.