கே.பாக்யராஜை தகனம் செய்யும் நேரத்தில் பூர்ணிமா கேட்ட கேள்வி... பகிர்ந்த பார்த்திபன்
கே.பாக்யராஜ்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜுன் மாதம் சோகத்தின் உச்சமாக அமைந்துவிட்டது.
காரணம் சினிமாவில் முக்கிய பங்கு பகித்த குரு, சிஷ்யன் ஒரே மாதத்தில் இறந்துவிட்டார்கள். மகன் இறப்பில் இருந்து மனமுடைந்து போன பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவால் வீடு, மருத்துவமனை என இருந்து கடைசியில் ஜுன் 10ம் தேதி உயிரிழந்தார்.
இப்போது ஜுன் 27ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பார்த்திபன்
தனது குருவின் இறப்பை தாங்க முடியாமல் முதல் ஆளாக நின்று எல்லா விஷயத்தையும் கவனித்து கடைசி வரை இருந்தவர் பார்த்திபன்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, கே.பாக்யராஜ் அவர்களை தகனம் செய்வதற்கு முன்பு அவர் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைத்து விடலாமா என பூர்ணிமா மேடம் என்னிடம் கேட்டார்.

தீயில் அந்த கண்ணாடி வெடித்து சார் முகத்தில் குத்திவிடுமோ என்ற பயத்தில் சொன்னார். வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வேண்டாம் மேடம் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னேன்.
இறந்தவர்களுக்கு வலி தெரியாது, ஆனால் அவர்கள் மேல் நாம் கொண்ட அன்புதான் அவர்களுக்கு வலிக்குமோ என நம்மை நினைக்க வைக்கிறது என கூறியுள்ளார்.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan