சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்திற்கு போக முடிவெடுத்தேன்.. பார்த்திபன் எமோஷ்னல்
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது டீன்ஸ் படம். இந்தியன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைக்காதது டீன்ஸ் படத்திற்கு சாதகமாக அமைந்து இருக்கிறது.
தன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் மகிழ்ச்சியாக ஒரு பதிவை பார்த்திபன் ட்விட்டரில் போட்டிருக்கிறார். இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்திற்கு சென்றுவிட முடிவெடுத்து இருந்தாராம் அவர்.
எமோஷ்னல் பதிவு..
"Friends, சத்தியமா சொல்றேன்.. TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன்."
"இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க.
அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.
நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு - இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
இவ்வாறு அவர் பதிவிட்டு இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
