கனவில் வந்த நடிகர் விஜய்.. நடிகர் பார்த்திபன் தவெகவில் இணைய போகிறாரா?
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் பகுதி வாரியாக, அணி வாரியாக பொறுப்பாளர்களை விஜய் நியமித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் உடன் அரசியல் வியூகம் அமைத்தல் பேச்சுவார்த்தை நடந்ததாக நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
கனவு..
ஆனால் அந்த சந்திப்பு கனவில் வந்தது என்றும் பார்த்திபன் குறிப்பிட்டு இருக்கிறார்.
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்… pic.twitter.com/MzV00BS3b7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025
அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் விஜய் கட்சியில் இணைவதற்காக தான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என கமெண்ட் செய்து இருக்கின்றனர்.
இருப்பினும் தனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை என அவர் பதில் அளித்து இருக்கிறார்.
இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 20, 2025
இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
