ஜாதி பெருமை பேசியதால் வந்த விமர்சனம்.. நடிகர் பார்த்திபன் எடுத்த புது முடிவு

By Parthiban.A Mar 29, 2026 12:41 AM GMT
Report

நடிகர் பார்த்திபன் சமீபத்தில் உஸ்தாத் பகத் சிங் என்ற தெலுங்கு படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும்போது தான் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாக மேடையிலேயே கூறினார்.

தமிழ்நாட்டை தாண்டியதும் அவர் ஜாதி பெருமை பேசுவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் அது பற்றி மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்தார். தான் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்பதை சொல்லவே அப்படி கூறினேன் என அவர் காரணம் கூறினார்.

ஜாதி பெருமை பேசியதால் வந்த விமர்சனம்.. நடிகர் பார்த்திபன் எடுத்த புது முடிவு | R Parthiban Naidu Controversy Applies No Caste

புது முடிவு

தான் விளக்கம் கொடுத்த பிறகும் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பார்த்திபன் ஒரு புது முடிவை எடுத்து இருக்கிறார்.

ஜாதி, மதம் இல்லாதவர் என சாதி சான்றிதழில் மாற்றம் செய்வதற்காக அவர் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள் அந்த மனுவை பின்னர் பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்களாம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US